கனடாவில் கடந்த 5 ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) விற்பனை அதிகரித்துள்ளது. 2024-ல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் (BC Province) மட்டும் 2,29,000 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி உள்ளன. இது மொத்த வாகனச் சந்தையில் 7% ஆகும்.
Next 5 yrs - 2030-ல் கனடாவின் EV துறையில் மட்டும் 1,84,000 வேலைகள் உருவாக்கப்படும் என்று Clean Energy Canada கூறுகிறது.
உலகம் முழுவதும் EV கார் விற்பனை அதிகரித்து வருகிறது. கனடா இதில் முன்னிலை வகிக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இப்போது இருப்பதைவிட 5 மடங்கு அதிகமாக EV கார் விற்பனை 2030-ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - அதாவது 11 லட்சம் EV கார் விற்பனை இலக்கு. 2040-ல் 40 லட்சம் EV கார் விற்பனையை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த வீடியோ கனடாவில் உள்ள எலக்ட்ரிக் வாகனத் துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகளைப் பற்றி பேசுகிறது. நீங்கள் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெகாட்ரானிக்ஸ், கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவராகவோ அல்லது இந்தத் துறையில் வேலை செய்பவராகவோ இருந்து, அடுத்த 2 முதல் 5 ஆண்டுகளில் கனடாவில் PR (நிரந்தர குடியுரிமை) அல்லது வேலை தேட திட்டமிட்டால், இந்த வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
எலக்ட்ரிக் வாகனத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) முதல் பவர் எலக்ட்ரானிக்ஸ், தெர்மல் மேனேஜ்மென்ட், பேட்டரி இன்டெக்ரேஷன், ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் போன்ற உயர் தொழில்நுட்ப வேலைகள் வரையிலும், EV ஆட்டோ டெக்னீசியன், வெஹிகிள் அசெம்பிளர், மெஷினிஸ்ட், வெல்டர் மற்றும் பெயிண்டர் போன்ற டெக்னிக்கல் லெவல் வேலைகள் வரையிலும் வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் இப்போது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தால் அல்லது ஆட்டோமொபைல் துறையில் வேலை செய்து கொண்டிருந்தால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் EV தொழில்நுட்பத்திற்கு உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் EV கார்களில் எஞ்சின், ஸ்டீயரிங் டிரான்ஸ்மிஷன், ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் போன்ற விஷயங்கள் இருக்காது. EV கார் என்பது ஒரு ரிமோட் கார் மற்றும் மொபைல் காம்பினேஷன் போன்றது. காரை திறந்து பார்த்தால் ஒரு servo மோட்டார், ஸ்மார்ட் டிரைவ், 4 வீல் டிரைவ் ஷாஃப்ட் மற்றும் பேட்டரி பேக் தான் இருக்கும். ஸ்டீயரிங் என்பது ஜாய் ஸ்டிக் போல கம்ப்யூட்டர் மற்றும் மோட்டாருடன் வயர் அல்லது வயர்லெஸ் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். எனவே ஆட்டோமொபைல் துறையில் வேலை செய்பவர்கள் EV தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டும்.
கனடாவில் டெஸ்லா, வோக்ஸ்வேகன், ரிவியன் போன்ற EV கார் தயாரிப்பு நிறுவனங்களில் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட், டேட்டா அனலிஸ்ட், சார்ஜிங் ஸ்டேஷன் சாஃப்ட்வேர் மற்றும் கனெக்டட் கார் ஆப் தொடர்பான பணிகளுக்கு ஆட்களை எடுக்கிறார்கள். கனடா அரசாங்கம் EV தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்கள் மற்றும் திறமையான நபர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் போன்றவற்றை மில்லியன் கணக்கில் முதலீடு செய்கிறது.
இதுபோன்ற வேலை வாய்ப்புகள் மற்றும் தகவல்களை technicianwanted.ca என்ற சேனலில் தொடர்ந்து பார்க்கலாம். மேலும் பல கனடா வாய்ப்புகள் குறித்த வீடியோக்களை எதிர் பார்க்கலாம்.
Comments
Post a Comment